சாம்பல் புதன் - தூத்துக்குடியில் சிறப்பு திருப்பலி

சாம்பல் புதன்
இயேசுபிரான் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு உள்ள காலம் தவக்காலமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது சாம்பல் புதன் என்றும் அழைக்கப்படுகிறது இந்த தவக்காலம் இன்று துவங்கியது இந்த காலங்களில் கிறிஸ்தவ மக்கள் உலக மக்களுக்காக இயேசு ஆற்றிய பாடுகளை உணர்ந்து 40 நாட்கள் நோன்பு இருப்பர் இந்த காலங்களில் கிறிஸ்தவர்கள் அறம் மற்றும் தர்மம் செய்வதிலும் நோன்பு இருப்பதிலும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர் .
இத்தகைய சாம்பல் புதன் இன்று துவங்கியதை தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தில் அதிகாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர் திருப்பலிக்கு பின் கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமாக பூசப்பட்டது இதேபோன்று தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் 40 நாட்களுக்கு பின்பு இயேசுபிரான் சிலுவையில் அறையப்படுவது புனித வெள்ளி ஆகவும் இயேசு மூன்றாவது நாள் உயிர்த்தெழுவது ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படுகிறது