விநாயகரின் சிறப்புகள் !!!
விநாயகரின் சிறப்புகள்
விநாயகரின் யானை வடிவ தலை அவர் "ஓம்கார" வடிவமானவர் என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
விநாயகருக்கு நான்கு கரங்களுடன் தும்பிக்கையும் சேர்ந்த ஐந்து கரங்கள் உண்டு. எனவே அவரை ஐங்கரன் என்று அழைப்பர் இந்த ஐந்து கரங்களும் படைத்தல், காத்தல், அளித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறது.
விநாயகருக்கு எளிதாக கிடைக்கக்கூடிய அருகம்புல் என்றால் மிகவும் விருப்பம் அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவி பிணி நீங்கும் என்பது ஐதீகம்
விநாயகருக்கு கரும்பு பழங்கள் சர்க்கரை பருப்பு நெயில் அவள் துவரை அவரை இளநீர் தேன் பயிர் அப்பம் பச்சரிசி விட்டு வெள்ளரிப்பழம் கிழங்கு அன்னம் கடலை மோதகம் ஆகியவற்றை வைத்து படைத்து வழிபட வேண்டும்.
சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இடையில் முருகப்பெருமான் அமர்ந்திருக்கும் வடிவத்தை, ‘சோமாஸ்கந்தர்’ வடிவம் என்று சொல்வார்கள்.
கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் இன்பமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து, அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
சிற்ப முறைப்படி உருவங்கள் செய்து வழிபட வேண்டிய விதிகள் எதுவும் கிடையாது. சிறிதளது மஞ்சளோ அல்லது சந்தனமோ கொண்டு, சின்னக் குழந்தை ஒன்று பிடித்து வைத்தால் கூட அதில் பிள்ளையார் எழுந்தருளி அருள்புரிவார்.