அய்யா வைகுண்டர் அவதார விழா - சாமிதோப்புக்கு யாத்திரை

அய்யா வைகுண்டர் அவதார விழா - சாமிதோப்புக்கு யாத்திரை
அய்யா வைகுண்டசாமி ஊர்வலம் (பைல் படம் )
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர், திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து சாமிதோப்பிற்கு ஊர்வலம் துவங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் சாமி தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் ஆண்டுதோறும் மாசி மாதம் 20ஆம் தேதி அய்யா வைகுண்டர் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று விழா கொண்டாடப்படுகிறது இதை ஒட்டி குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள தலைமைப்பதில் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வார்கள்.

முன்னதாக இந்த விழாவில் தொடக்கமாக திருச்செந்தூரில் அவதார பதியில் இருந்து குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள வைகுண்டபதிக்கு வாகன ஊர்வலம் நேற்று காலை தொடங்கியது. இதே போல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்தும் வாகன ஊர்வலம் நேற்று காலை தொடங்கியது. இந்த ஊர்வலங்கள் நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவில் வந்தடைந்தது. இன்று ஞாயிறு ஊர்வலம் சாமி தோப்புக்கு புறப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story