பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழா

பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழா

தேர்பவனியில் கலந்து கொண்டவர்கள்

பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

குடந்தை மறை மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு முதல் நாள் முன்னாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலியும் இரவு குடந்தை பெஸ்கி கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து மின்னலங்கார தேர்பவனியும் நடைபெற்றது.

2வது குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் காலை,மதியம் திருப்பல்லியும் மாலையில் திருவிழா கூட்டு திருப்பல்லியும் நடைப்பெற்றது இரவு பாஸ்டின் கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு வாண வேடிக்கை முழங்கிட மணங்கமலும் மலர்கள் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனி நடைப்பெற்றது.

இதில் காவல் சம்மனசு, புனித செபஸ்தியார், உயிர்த்த இயேசு, சூசையப்பர், தேவமாதா, ஆகிய தேர் பவனிகள் மலர்கள் மின்னலங்காரம் வாண வேடிக்கை பேண்ட் வாத்தியம் முழங்க பாபநாசம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. இரவு 2 மணி அளவில் பாபநாசம் மேல வீதியில் சம்மனசு மாலை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்று அதிகாலை 5 தேர் பவனிகளும் கோவிலை வந்தடைந்தது.

வருகிற 3-வது நாள் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் தலைமையில் காலையில் திருவிழா திருப்பல்லியும் மதியம் ,மாலை திருப்பலியும் அதனை தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெற்றது இவ்விழாவிற்கு வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்யராஜ் இணைப்பங்கு தந்தை தார்த்தீஸ் மற்றும் உபதேசிகர்கள் பங்கு பேரவை பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் போலீஸ் சூப்பிரண்டு அசோக் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீஸார்கள் செய்து இருந்தனர்

Tags

Next Story