பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

கொடியேற்றத்தில் கலந்து கொண்டவர்கள்

பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பா

பநாசம்புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் மற்றும் இணை பங்குத்தந்தை தார்த்தீஸ் ஆகியோர் ஜெபம் செய்து, அர்ச்சித்து கொடியேற்றினர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும்,

இரவில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி இரவு 10 மணிக்கு புனித செபஸ்தியாரின் ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story