சித்திரை பெருந்திருவிழா முன்னிட்டு பெரிய தேர் முகூர்த்த பூஜை

சித்திரை பெருந்திருவிழா முன்னிட்டு பெரிய தேர் முகூர்த்த பூஜை நடை பெற்றது.
கும்பகோணம் ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா முன்னிட்டு பெரிய தேர் முகூர்த்த பூஜை நடைபெற்றது. 108 திவ்விய தேசங்களில் மூன்றாவதாகவும், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், ஏழு ஆழ்வார்களால் போற்றி பாடப் பெற்றதும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனும் அற்புதமான தமிழ் பாடல் தொகுப்பு அறியப்பட்டதும், கணித மேதை ராமானுஜன் ஞானம் பெற்றதும் என பல்வேறு சிறப்புகளை கொண்ட ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயிலில் உள்ள சித்திரை பெரிய தேர் தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாகும். தேரின் சாதாரண எடை 350 டன்னாகவும் தேர் அலங்கார கட்டுமானத்திற்கு பின் 500டன்னாகவும்இருக்கும். ஒட்டுமொத்த உயரம் 110 அடியாக இருக்கும். வருகின்ற ஸ்ரீ குரோதி ஆண்டு சித்திரை 10 ம் தேதி, சித்ரா பௌர்ணமி 23.04.24 , செவ்வாய்கிழமை காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர் முகூர்த்த பூஜை 25.03.24,திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி ,சிவசங்கரி முன்னிலையில் சக்கரபாணி பட்டாச்சாரியார் தேர் விக்ரகங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்து முகூர்த்த பூஜை செய்தார். திருக்கோயில் கொத்தனார் ச. ரமேஷ் தேர் முகூர்த்த கால் ஊன்றி அலங்காப் பணிகளை தொடங்கினார். தேரின் மீது கால்கள் ஊன்றி கட்டுமானம் செய்து அலங்கரித்து தேரோட்டம் நடைபெற ஒரு மாதம் ஆகும். கடும் கோடை வெயிலில் நடைபெறும் தேர் கட்டுமான பணிகள் சவாலான ஒன்றாகும்.

Tags

Next Story