கோயிலை சுற்றி வரலாமா?

கோயிலை சுற்றி வரலாமா?

வலம் வருதல்

கோயில் தரிசனத்துக்குப் போகும் இளைஞர்களிடம் பெரியோர்கள் 'கோயிலை வலம் வர மறந்துவிடாதே' என்று கூறுவதுண்டு. கோயிலை வலம் வர வேண்டும் என்பதே இப்போதனை. இதன் பின்னால் சிறப்பான ஓர் அர்த்த- மும் சாஸ்திரமும் உண்டு.

காலையிலும் மாலையிலும் பொதுவாக உடற்பயிற்சியின் வேளைகளாக நாம் பழக்கப் படுத்தியுள்ளோம். இது இயலாதவர்களுக்கு கோயில் தரிசனமும் கோயிலை வலம் வருவதும் நல்ல உடல் பயிற்சியாக அமையும். சிறியவர்களு - க்கும் பெரியவர் களுக்கும் எளிதில் செய்யக் கூடிய ஓர் உடல் பயிற்சியே கோயிலை வலம் வருதல்.காலணிகளைக் களைந்து வலம் வருதல், தோப்புக்கரணமிடுதல், கும்பிடுதல் முதலியவை உடற்பயிற்சியின் சக்தியை அதிகரிக்கின்றது. இவ்வாறு நாமறியாமலே உடலிலுள்ள எல்லா முட்டுக்களும், தசைகளும் நன்றாக அசைவடை யும் ஓர் உடற்பயிற்சியே கோயில் தரிசனத்தில் நாம் செய்வது.

வலம் வருதல் என்பது வலது பக்கம் சுற்றி வருதல் என்பதே. பொதுவாக கோயில் வலம் வருவது வலதுபக்கமாகத் தான். இப்படி செய்வதில் நாம் இறைவனுடன் கூடுதல் நெருங்குகின்றோம். என்பது ஆசாரியாப்படிப்பினை கோயில் வலம் வரும் போது முன் ஜென்மங்களில் செய்த பாவமும் அழிந்து விடும் என்பது நம்பிக்கை.

Tags

Next Story