இஞ்சிக் கூட்டில்லாத விருந்து உண்ணக் கூடாதோ?

இஞ்சிக் கூட்டில்லாத விருந்து உண்ணக் கூடாதோ?

விருந்து 

இஞ்சியில்லாத விருந்து உண்டதாக அறிந்தால் ஏதோ பெரும் விபத்து நேர்ந்து விட்டதாக நம் பண்டைய மக்கள் கருதியி ருந்தனர் . சரித்திரத்திலும் புராணத்திலும், இன்றய காலத்திலும் இஞ்சியின் மேன்மை பெரிதாக வருணிக்கப்படுகின்றது.

மலையாள இலக்கியத்தில் மிகப் பிரசித்தியான "பறயி பெற்ற பந்திருகுலங்கள்" என்ற கதையைப் பார்க்கும் போது,கதை ஆரம்பிப்பதே இஞ்சிக்கறியின் விவரணத்துடன் என்பதைக் காணலாம். ஆயிரம் கறிகளுக்கு சமமாக இஞ்சியை சிறப்பித்து அதைத் தயாரித்து பரிமாறும் சாமர்த்தியம் வெளிப்படுத்திய பெண்ம ணியை வரருசி தன் மனைவியாக்கிக் கொண்டான். இங்கிருந்து அந்த பன்னிரண்டு குலங்களின் சரித்திரம் ஆரம்பமாகின்றது.

இலையிட்டு விருந்துபரிமாறும் போது முதலாவதாக இலையில் வைப்பது இஞ்சிக்கூட்டு. ஆனால் கடைசியில் அருந்துவதும் இஞ்சியே. இஞ்சியில்லாமல் விருந்துண்ணுவதில் அர்த்த மில்லை என்றும் அதை விட சாப்பிடாமல் எழுந்து செல்ல வேண்டும் என்பதும் அன்று எழுதி- வைக்காத விதிமுறை. இஞ்சியின் மருத்துவ குணங்களை நவீன மருத்துவத் துறை அங்கீகரி த்துள்ளது.

இருகுடல்களையும் சுத்தம் செய்ய சக்தி வாய்ந்த இஞ்சித்தயிர் குடித்தால் மூல வியாதி நீங்கும் என்று மருத்துவத்துறை கண்டறிந்துள்ளது. உணவின் வாயிலாகவயிற்றுக்குள் சென்று சேருகின்ற மசாலைகள், பழையவை, வேகாதவை முதலியவற்றை ஜீரணிக்கும் சக்தி இஞ்சித்தயி- ருக்குண்டு,இஞ்சி,கருவேப்பிலை, மிளகாய்,சிறு வெங்காயம் என்பவை நன்றாக நொறுக்கி தயிரில் சேர்த்து கலக்கித் தயாரிப்பதே இஞ்சித் தயிர்.

Tags

Next Story