சிதம்பரம் நடராஜர் கோயில்!
சிதம்பரம் நடராஜர் கோயில்
கடலூர் மாவட்டத்தில் காண வேண்டிய பல தலங்களுள் சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் ஒன்று .வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும், காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.இக்கோயில் ஒரு வரலாற்று கருவூலம். எல்லா கோயில்களிலும் உள்ள சிவ கலைகள் இங்குள்ள மூலட்டானலிங்கத்தில் ஒடுங்குவதால் அவர் திருமூலட்டநாதர் என்ற பெயர் பெறுவார் சிவகாமி அம்மை, பாண்டி நாயகம், முக்குறுணி பிள்ளையார், சிவகங்கை முதலியன சிறப்புடையவை . ஒரு கால்மண்டபம் ,நூறு கால் மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் ஒரே வளாகத்தில் இருப்பது சிறப்பு அம்சம். இளமையாக்கினார் கோயில், பதஞ்சலியார் கோயில், தில்லை மாகாளி கோயில் ,மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் திருக்கோயில் ஆகியன காணத்தக்கவை .நாட்டிய சாஸ்திரம் தொடர்பான அனைத்து சிற்பங்களும் சிதம்பரம் கோயிலில் உள்ளன. நடராஜரின் பஞ்ச சபைகளில் சிற்றம்பலமாக உள்ள இந்த தலத்தில் நடராஜர் சன்னதி எதிரில் உள்ள மண்டபத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு, சிவன், என மூவரையும் ஒரு சேர தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான கோவிந்தராஜ பெருமாள் தலம் அமைந்திருப்பதை பலரும் அதிசயமும் ஆச்சரியமும் கலந்த பக்தியோடு தரிசித்து மகிழ்கின்றனர். சிவனுக்கும் சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில் ஆடிய தில்லை காளியின் கோவில் ,நடராஜர் கோவில் அருகில் உள்ளது. கிட்டத்தட்ட 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இதுவாகும். இறைவன் இத்தளத்தில் நடராஜர் என்ற உருவமாகவும்.ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிகலிங்கம் என்ற அரு உருவமாகவும் அருள் பாலிக்கிறார் .சித் சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயில் திரை அகற்றப்பட்டு ஆரத்தியும் காட்டப்படும். அதற்குள் உருவம் ஏதும் இருக்காது .தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டு காட்சியளிக்கும். அதாவது உருவம் ஏதும் இல்லாமல் வில்வத்தலம் தொங்குவதன் இரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதாகும். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. இறைவனை உணர மட்டுமே முடியும் என்பதை அதன் அர்த்தம்
திருப்பாப்புலியூர்
பிரதான பெருமைகளைப் பெற்ற இவ்வூர் இம்மாட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலம் .அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவராலும் பாடல் பெற்றது இவவூர் .கெடில நதிக்கு கிழக்கிலும், மஞ்ச குப்பத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ள நான் மாட கூடல் கொண்ட சிவசேஷத்திரம்.இவ்வூர் ஒரு காலத்தில் ஜைனர்களின் கேந்திரமாக விளங்கியது.