சிதம்பரம் நடராஜர் கோயில் !

சிதம்பரம் நடராஜர் கோயில் !

சிதம்பரம் நடராஜர் கோயில் 

கடலூர் மாவட்டத்தில் காண வேண்டிய பல தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலும் ஒன்று. இக்கோயில் ஒருவரலாற்று கருவூலம். எல்லா கோயில்களிலும் உள்ள சிவக்கலைகள் இங்குள்ள மூலட்டான லிங்கத்தில் ஒடுங்குவதால் அவர் திருமூலட்டநாதர் என்ற பெயர் பெறுவார். ஒரு கால் மண்டபம், நூறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஒரே வளாகத்தில் இருப்பது சிறப்பு அம்சம் . இறைவனை இத்தளத்தில் நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும் , ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள் பாலிக்கிறார்.சித் சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயில் திரை அகற்ற பெற்று, ஆரத்தியும் காட்டப்படும். அதற்குள் உருவம் ஏதும் இருக்காது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டு காட்சியளிக்கும். அதாவது உருவம் ஏதும் இல்லாமல் வில்வத்தளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதாகும். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. இறைவனை உணர மட்டுமே முடியும் என்பது அதன் அர்த்தம். பூமி பந்தின் மைய புள்ளி அமைந்துள்ள இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் இருப்பதோடு காந்த சக்தியின் மையப் புள்ளியானது நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாகவும் சர்வதேச ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள் .நடராஜரின் பஞ்ச சபைகளில் சிற்றம்பலமாக உள்ள இந்த தலத்தில் நடராஜர் சன்னதி எதிரில் உள்ள மண்டபத்தில் நின்றபடி பிரம்மா, விஷ்ணு , சிவன் என மூவரையும் ஒரு சேர தரிசிக்கலாம். நடராஜர் சன்னதி அருகில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜ பெருமாள் தலம் அமைந்திருப்பதை பலரும் அதிசயமும் ஆச்சரியமும் கலந்த பக்தியோடு தரிசித்து மகிழ்கின்றனர். சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில் ஆடிய தில்லை காளியின் கோயில், நடராஜர் கோவில் அருகில் உள்ளது. கிட்டத்தட்ட 51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவத்தலம் இதுவாகும். சிறந்த கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் உலகப் புகழ் பெற்றுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story