ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு

தர்மபுரி நகராட்சி காலனி பகுதியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சாமிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நெசவாளர் காலனி பகுதியில் எழுந்துருளியுள்ள அருள்மிகு ஆதி லிங்கேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நேற்று இரவு ஆதிலிங்கேஸ்வரருக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால், தயிர், இளநீர், பன்னீர் ,தேன் ,விபூதி போன்ற பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பிறகு ஆதிலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை வழிபாடு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர், பின்பு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story