புனித ரமலான் துவக்கம் : நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை

புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க துவங்கினர்.

சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.

பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா மட்டுமில்லாமல் நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நடைபெற்ற தாராவீஹ் சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்யும் சிறப்புவாய்ந்த இந்த நோன்பு காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் தர்மத்தை செய்ய உள்ள இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியோடு ரமலான் நோன்பை தொடங்கினர்

Tags

Next Story