சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் ரூ.37 லட்சம் உண்டியல் காணிக்கை

சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் ரூ.37 லட்சம் உண்டியல் காணிக்கை

சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் ரூ.37 லட்சம் உண்டியல் காணிக்கை

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் ரூ.37 லட்சம் உண்டியல் காணிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டது. தமிழகத்தில் முருகக் கடவுள் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் உள்ள 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.37 லட்சத்து 70 ஆயிரத்து 167 ரொக்க தொகை, 395 வெளிநாட்டு கரன்சி, 82 கிராம் தங்கம், 2,570 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இவை அனைத்தும் எண்ணி கணக்கிடப்பட்டு கோயில் அலுவலக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன. இப்பணியில் கோயில் இணை ஆணையர் மோகனசுந்தரம் மேற்பார்வையில், துணை ஆணையர் உமாதேவி, மயிலாடுதுறை உதவி ஆணையர் முத்துராமன், ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன், கண்காணிப்பாளர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story