கீழ்மாந்தூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

கீழ்மாந்தூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
கீழ்மாந்தூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 1500க்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.

கீழ்மாந்தூர் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 1500க்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அடுத்த கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இவ்வாண்டு கடந்த 17ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று தீமிதி திருவிழாவில் பத்து நாட்கள் விரதம் இருந்து 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குதல் எனும் தீமிதி நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள்.

சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story