திண்டுக்கல் நகரம்!

திண்டுக்கல் நகரம்!

திண்டுக்கல் சௌந்தர்ராஜ பெருமாள் கோயில்

கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமான திண்டுக்கல் மாவட்டத்தின் தலைநகராக விளங்குகிறது.இவ்வூ ரில் உள்ள மலை ஒரே கல்லால் ஆனது.திண்டு போல் அரைவட்ட வடிவமானது இந்த ஊர் இங்குள்ள மலையால் இப் பெயர் பெற்றது. திண்டுக்கல்லில் சிவன் கோயில்களும், பெருமாள் கோயில்களும், உள்ளன. இராமலிங்க சுவாமி கோயிலும் மலையடி வாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது மாரியம்மன் திருவிழாவில் தீச்சட்டி ஏந்துவதும் சுற்றுவதும் சிறப்பாக நடைபெறும்.

சௌந்தர்ராஜ பெருமாள் கோயில்

தாடிக்கொம்பு என்னும் ஊர் அருகில் இக் கோயில் அமைந்துள்ளது .நாயக்க அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் ,திருமலை நாயக்கர் காலத்திய கல்வெட்டு ஒன்று காணப்படுகின்றது .கோயிலை சுற்றி பெரிய மதில் சுவர் உள்ளது. உள் பிரகாரத்தில் ஐந்து சுவாமி சன்னதிகள் உள்ளன. தாயார் சன்னதி ஒரு கலைக்கூடமாக திகழ்கிறது. மகா மண்டபத்து தூண்கள் இசை தூண்களாகவும் அறிய சிற்பங்களால் கவினுற காட்சி அளிக்கிறது. நரசிம்மாவதாரம் உலகளந்த பெருமாள் கருடாழ்வார்,கற்சி ற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை. பளிங்கு தூண்களும்,கவினுறு மண்டபங்களும் விஜயநகர கலை அம்சங்களை கொண்டு விளங்குகின்றன. தள வரிசையில் விழும் மழை நீர் எங்கும் தேங்கி நிற்காமல் மறைந்துவிடும் நுட்பமான வடிகால் வசதி குறிப்பிடத்தக்கது.

மல்லீஸ்வரர் கோயில்

மிகப் பழமையான இக்கோயில் ரங்கமலையில் உள்ள மலை உச்சிக்கு சற்று கீழே இந்த சிவன் கோயில் இருக்கிறது பாண்டியர்களால் இக்கோயில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

கோபிநாத சுவாமி கோயில்

ரெட்டியார்சத்திரம் ரயிலடியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கோபிநாத சுவாமி கோயில் இருக்கிறது .கால்நடைகளை காக்கும் தெய்வமாக எண்ணி மக்கள் வணங்குகின்றனர் .ஆயிரக்கணக்கான மாடு ,கன்றுகள் உருவங்களை பொம்மைகளாக செய்து காணிக்கையாக வழங்குகின்றனர்.

குறிஞ்சி ஆண்டவர் கோயில்

கொடைக்கானல் மலையில் குறிஞ்சி பூ பூக்கத் தொடங்கும் முதலாவது இடத்தில் குறிஞ்சி ஆண்டவர் என்னும் தெய்வத்திற்கு ஒரு கோயில் இருக்கிறது .இங்கு தொலைநோக்கி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது .இக்கருவி வாயிலாக மதுரை மாநகர் பெரியகுளம், பழனி கோயில், பள்ளத்தாக்குகளின் இயற்கை எழிலை கண்டு ரசிக்கலாம்.

Tags

Read MoreRead Less
Next Story