திருப்பதியில் தரிசன டோக்கன்கள் விநியோகம் !!

திருப்பதியில் தரிசன டோக்கன்கள் விநியோகம் !!
X

Tirupati 

திருப்பதியில் தரிசன டோக்கன்கள் விநியோகம் !!திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியதாவது,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 10-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 19-ந்தேதியில் இருந்து பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக இலவச தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு முன்பு போலவே எந்த நாளுக்கு தரிசன டோக்கன் வேண்டுமோ அந்த நாளிலேயே தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட் டோக்கன்) இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

பக்தர்கள் இந்த டோக்கன்களை அலிபிரி அருகில் உள்ள பூதேவி வளாகத்திலும், ரெயில் நிலையம் அருகில் உள்ள விஷ்ணு நிவாசத்திலும், பஸ் நிலையம் அருகில் உள்ள சீனிவாசத்திலும் பெற்றுக்கொள்ளலாம். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story