கிரக தோஷங்கள் கோயில்களை பாதிப்பதில்லையா?

கிரக தோஷங்கள் கோயில்களை பாதிப்பதில்லையா?

கிரக தோஷங்கள்

பொதுவாக கிரக தோஷங்கள் பூமியிலுள்ள மனிதர்களையும், விலங்கினங்களையும் எல்லா சரங்களையும் பாதிப்பது வழக்கம். ஆனால் கோயிலையும் கோயில் சமூகத்தையும் ஒன்றும் பாதிப்பதில்லை என்பது நிஜமானது.

கோயில்களில் எந்த மங்கள காரியங்களுக்கும் மூகூர்த்தம் பார்ப்பதில்லை. நமது பிரதேசத்தில் சில கிரகங்களின் கதிர்கள் நேரடியாகப் படிவதில்லை. வாயு மண்டலத்திலிருந்து அந்தந்த கிரகங்களின் கதிர்களை கோயில் விக்கிரகங்கள் ஈர்த்து வளையங்களாக நிரந்தரமாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றன.

கிரகங்களின் கதிர்களின் ஏற்ற தாழ்வு கோயிலுக்குள் பாதிப்புண்டாக்காத முறையில் அங்கே பரப்பப் படுகின்ற காந்தக் கதிர்கள் பாதுகாத்து வருகின்றன. இந்த கதிர் பிரகாசம் ஒரு கவசமாக அமைகின்றது என்று இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. அதனால் பொதுவாக வந்து சேரும் கிரகப் பிழைகளை அகற்ற சம்பந்தப்பட்ட தேவர்கள் குடி கொள்ளும் கோயில்களில் ஆராதனை செய்து வலம் வந்தால் போதுமானது.

Tags

Next Story