ஐந்து தலை பாம்பை பற்றி தெரியுமா ?? சிவன் என் ஆபரணமாக அணிந்துள்ளார் !!

ஐந்து தலை பாம்பை பற்றி தெரியுமா ?? சிவன் என் ஆபரணமாக அணிந்துள்ளார் !!

சிவன்

பாண்டிய காலத்திற்கு பின்னர் கிபி 1376 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயம் போடிநாயக்கனூர் அரண்மனையை ஆண்ட நாயக்க வம்சத்தின் மூலம் புனரமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டும் வந்துள்ளது.

அக்காலம் தொட்டு தற்போதுவரை ஐந்து தலை நாகம் ஒன்று இந்த ஆலயத்தை காவல் காத்து வந்ததுள்ளதாகவும், அந்த நாகம் தற்போதும் உள்ளதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். இதற்கு விசேஷ காரணம் உள்ளது. மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு மனிதன் ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தி விட்டால் வாழ்விற்கு அழகூட்டும் ஆபரணமாக மாறி விடும்.

இதை நமக்கு உணர்த்தவே நாதனாகிய சிவன் ஐந்துதலை நாகப்பாம்பை ஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். இதை வெளிப்படுத்தும் விதமாக தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை லிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும்.

Tags

Next Story