விரதம் இருப்பது ஆயுளை அதிகரிக்குமா ?

விரதம் இருப்பது ஆயுளை அதிகரிக்குமா ?

விரதம்

மலையாளத்தில் லலிதாம்பிகஅந்தர்ஜனம் எழுதிய ஒரு கதையில் 'குஞ்சோலாத்தம்மா' விடம் லட்சுமி கேட்கின்றாள் 'தாங்கள் பட்டினியிருப்பது வறுமையினாலா' என்று. சற்று யோசனை செய்து விட்டு கூறினார்கள் "வறுமையில்லாமலாவதற்காகவே, வறியவர்களின் துன்பங்களைப் புரிந்து கொள்வதற்காகவே, வறுமை ஒரு பெரும் கஷ்டம் என்பதை அறிகின்றேன்" என்று ஏகாதசி விரதமும், திங்கள் கிழமை விரதம் முதலியவற்றால் மாதத்தில் பெரும்பான்மையான நாட்கள் பட்டினியாக இருக்கும் குஞ்சோலத்தம்மா அப்போதும் ஏழைகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார்.

இது பிறர் வறுமையின் துக்கத்தில் கருணையுடன் பங்குபெறுவதன் அடையாளமே. ஆனால் பட்டினி ஏழையின் துரதிர்ஷ்டம் என்று மனதில் கொண்டு செல்வம் செறிந்த நிலையில் மதி மறந்து வாழ்பவர்கள் கூட இனி பட்டினியின் பாதையை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை வரலாம். நாம் பார்த்த கதையின் குஞ்சோலாத்தம்மாவைப் போல் நீடித்த ஆயுள் பெற்று உடல் வளத்துடன் வாழ விரும்பினால் உணவைக் கட்டுப்படுத்துவதுதான் பயனளிக்கும் வழி.

நமது உணவின் 'கலோரி' அளவைக் குறைத்தால் ஆயுள் நீடிக்க இயலும் என்று மெரிலான்டிலுள்ள 'நாஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப்ஏஜிங்' அண்மையில் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். காலிஃபார்னியா பல்கலைக் கழகத்தில் ஒரு கூட்டம் எலிகளை கலோரிகட்டுப்படுத்திய உணவு கொடுத்து ஆராய்ந்த போது அவை அதிக காலம் நீடித்து வாழ்ந்ததாகக் கண்டறிந்தனர்.

புழுக்கள், ஈக்கள் முதல் நாய்கள் வரையுள்ள பல உயிரினங்களிலும் இவ்வகை சோதனைகள் செய்த போதும் இதே உண்மை புலப்பட்டது. பட்டினி எதனால் ஆயுளை நீடிக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. உணவு குறையும் போது உடலில் சக்தி செலவழிதல் குறைந்திருப்பதோடு செயல்பாடுகள் வேகமும் குறைந்திருக்கும். உள்ளுறுப்புக்களில் தேய்மானம் குறைகின்றது. வயோதிபமும் தள்ளிப் போடப்படுகின்றது.

இதை உணர்ந்த மனிதன், பசியை சகித்தாவது ஆயுளை நீடிக்க முன் வருவதாகக் காணலாம். குறைந்த கலோரி உணவுகள் அருந்தி உணவருந்துதலைக் கட்டுப்படுத்தி வாழும் போது மூளைக்கு பசியைக் குறித்த தகவல்கள் சரியாகச் செல்லாமலிருக்கச் செய்யும் மருந்துகளும் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனைகள் வெற்றியடைந்ததால் பசியின் கொடுமையை உணராமலேயே ஆயுளை நீடிக்கலாம்.

Tags

Next Story