உதய சூரியனின் சக்தி மறையும் சூரியனுக்குண்டா?

உதய சூரியனின் சக்தி மறையும் சூரியனுக்குண்டா?

 சூரியன்

காலைக் கதிரவனின் சக்தி மறையும் போது இல்லை என்பது நம் பண்டயர்கள் அறிந்திருந்தனர் . மேலும், சக்தி குறைந்த சூரியனின் நிறமே நாம் மாலைப் பொழுதில் காணும் சிவப்பு என்றும் உறுதியாகக் கூறியிருந்தனர்.

இது மிகச்சரியானது என்று சூரியனைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கண்டறி ந்துள்ளனர் சூரிய ஒளி பூமியின் வாயு மண்டலத்தில் புகுந்து செல்லும் போது ஒருபாகம் கதிர்கள் வாயு அணு மூலக்கூறுகளுடன் மோதிச்சிதறுகின்றன.

ஒளியில் அலை நீளம் குறைந்த பாகங்களே இவ்வாறு சிதறுகின்றன என்பதும் கண்டறிந்துள்ளனர். மேலும் ஒளி எவ்வளவு தூரம் செல்லுகின்றதோ அவ்வளவு அதிகம் ஒளிக் கதிர்கள் சிதறிக் கொண்டிருக்கும்.

மாலையில் வந்து சேரும் ஒளிக் கதிர்கள் நடுப்பகலில் வரும் கதிர்களைவிட பதினாறு மடங்கிற்கு மேல் பயணம் செய்யும் போது ஒளிக் கதிர்களிலுள்ள அலை நீளம் குறைந்த பாகங்களெல்லாம் சிதறித் தெறித்த பின் அலை நீளம் கூடிய சிவப்புக் கதிர்கள் சிதறாமல் வந்து சேரும்.

மாலை நேரம் சூரியனைப் பார்க்கும் போது இவ்வாறு எஞ்சியிருக்கும் சிவப்புக் கதிர்கள் மனிதர் கண்களுக்கு புலனாகின்றது. இதனால் மறையும் சூரியன் சிவப்பாகக் காட்சியளிக்கின்றது.

Tags

Read MoreRead Less
Next Story