கனவில் இறந்தவர்கள் வந்தால் பயப்படாதிங்க - இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !!

கனவில் இறந்தவர்கள் வந்தால் பயப்படாதிங்க - இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !!

ஆன்மிகம்

மனிதர்களின் வாழ்வில் கனவுகள் வருவது சாதாரணம். நிஜ வாழ்வில் நாம் புரிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை புரிய வைக்கும் கனவுகள் நம் ஆழ்ந்த எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களை வெளிப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த வழி ஆகும்.

இறந்த நம் அன்புக்குரியவர்கள் கனவில் தோன்றுவது மிகவும் இயல்பாக நடக்கும். இவ்வாறு, இறந்தவர்கள் கனவில் வருவது நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பலருக்கும் கேள்வி எழுந்து வருகின்றன. இறந்தவர்கள் நம்மை காப்பாற்றவோ அல்லது எச்சரிக்கவோ கனவில் வருகிறார்கள் என்று சிலர் நம்புகிறார்கள். மற்றவர்கள் அதனை சாதாரணமான நினைவாக எடுத்து கொள்கின்றனர்.

இப்போது இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பயன் ?

நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம். இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.

இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.

இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள்.

இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.

உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள். நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.

இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.

இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.

குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள். இளம் மனைவி இறப்பதுபோல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.

Tags

Next Story