ஸ்ரீரெங்கநாச்சியாருக்குவைகுந்த ஏகாதசி விழா இன்று தொடக்கம்

ஸ்ரீரெங்கநாச்சியாருக்குவைகுந்த ஏகாதசி விழா இன்று தொடக்கம்

ஸ்ரீரங்கநாதர் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசி விழா இன்று தொடங்குகிறது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாளுக்கு நடத்தப்படும் அனைத்து உற்ஸவ விழாக்காளும் ஸ்ரீரெங்கநாச்சியாா் எனப்படும் தாயாருக்கும் நடத்தப்படும்.அதன்படி நம்பெருமாளுக்கு நடத்தப்பட்ட வைகுந்த ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றதை தொடா்ந்து புதன்கிழமை (ஜன.3) ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுந்த ஏகாதசி விழா தொடங்குகிறது.

ஸ்ரீரெங்கநாச்சியாரின் வைகுந்த ஏகாதசி விழா பகல்பத்து 5 நாள்களும், இராப்பத்து 5 நாள்கள் என 10 நாள்கள் நடைபெறவுள்ளது. பகல்பத்தின் முதல் நாளான புதன்கிழமை தொடங்கி ஜன. 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஸ்ரீரெங்கநாச்சியாா் மூலஸ்தானத்திலிருந்தவாரே பகல்பத்தின் விழாவின் போது இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாள்களும் தினமும் மாலையில் கேட்டருள்வாா். திருவாய்மொழித்திருநாள் எனும் இராப்பத்து விழா ஜன.8 ஆம் தேதி தொடங்கி 12- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

Tags

Next Story