நவராத்திரியின் சிறப்புகளும் அதன் வழிப்பாடு முறைகளும் !!

நவராத்திரியின் சிறப்புகளும் அதன் வழிப்பாடு முறைகளும் !!

நவராத்திரி

நவராத்திரி என்றால் "ஒன்பது நாட்கள்" என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. நவராத்திரியின் தனிச்சிறப்பே இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பண்டிகையாகும்.

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா தான் நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் முதல் 3 நாட்கள் அம்பாளுக்காக அர்ப்பணிக்கப்படுகின்றன.

இந்த முதல் 3 நாட்களும் மாஹேஸ்வரி, கெளமாரி,வாராஹி என்ற பெயர்களில் துர்க்கைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும் அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமிக்கு சிறப்புப் பூஜைகள் நடக்கும். மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என்ற பெயர்களில் இப்பூஜைகள் நடக்கும். கடைசி 3 நாட்கள் சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என்ற பெயர்களில் சரஸ்வதிக்கு பூஜைகள் செய்யப்படும்.

நவராத்திரி குறித்து கூறப்பட்டுவரும் புராணக் கதை:

வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே? வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சிஅவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான். அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார். மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான். எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை. மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர். தேவர்கள் மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான். அவனை சம்ஹாரம் செய்ய தகுந்தவள் மகாசத்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு. மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள். தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும்,அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்காரபூஷிதையாய் புறப்பட்டாள். அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன். தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விரதம்:

நவராத்திரியானது இந்து மக்களால் எந்த நாட்டில் இருந்தாலும் கொண்டாடப்படும் ஒரு விரத முறை எனலாம்.

நவராத்திரி விரதங்களும் பல வகைகளைக் கொண்டுள்ளன.

இந்த ஒன்பது நாட்களிலும் சிலர் தண்ணீர் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள், சிலர் பழங்களை சாப்பிடுகிறார்கள், சிலர் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுகிறார்கள். நவராத்திரி விரதத்தின் போது கோதுமை மற்றும் அரிசி போன்ற வழக்கமான தானியங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கிச்சடி, உப்புமா, தோக்லாஸ் (குஜராத்தி) அல்லது பாயசம் (கீர்) தயாரிப்பதில் அரிசிக்கு பதிலாக சாமை அல்லது தினை, ஜவ்வரிசி (சாபுதானா) உபயோகப் படுதா படுகிறது பயன்படுத்தப்படலாம்.

நவராத்திரி விரதத்தின் போது அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம். சிலர் இந்த ஒன்பது நாட்களும் பழங்கள் மற்றும் பால் மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது, பெரும்பாலான மக்கள் காய்கறிகள் - உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி இனிப்பு உருளைக்கிழங்கு, சூரன் கிழங்கு, பூசணி, கீரை, தக்காளி, வெள்ளரி, கேரட் போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது பால் மற்றும் பால் பொருட்கள், உட்கொள்ளப்படுகின்றன.

வெங்காயம் அல்லது பூண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அசைவ உணவுகள், முட்டை, மது, புகைபிடித்தல் ஆகியவையும் உட்கொள்ளக் கூடாது.

கொலு படிகள் அமைக்கும் முறை:

கொலுபடிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.

* கொலுவைக்கும் பொழுது முதல் படியில் ஓறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.

* இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின்பொம் மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

*மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம் மைகளை வைக்கவேண்டும். *

*நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

*ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

* ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண் டும்.

*ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம் மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிர கங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திக ளையும் அவர்களின் துனைாவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமாளையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.

Tags

Next Story