ஸ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா

ஸ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா

வருஷாபிஷேக விழா

ஸ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அருகே உள்ள ஆ.சிரமம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கொங்கேஸ்வரர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மிகப் பழமையான புராண சிறப்புமிக்க இத்திருக்கோவிலில் ஸ்ரீ கொங்கேஸ்வரர் சுவாமி ஏழுமுக காளியம்மன், பூர்ண புஷ்களா தேவியர்கள், சமேத ஸ்ரீ ஐயனார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். இத்திருக்கோவிலின் வருஷாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மூலவர் சன்னதியின் முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து பூக்களால் அலங்கரித்தனர். மூன்று பிரதான யாக குண்டம் அமைத்து இரண்டு கால யாக சாலை பூஜையில் அனைத்து தெய்வங்களின் மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து, பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து கைலாய வாத்தியங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து, மூலவர் அய்யனார் சுவாமி, ஏழுமுக காளியம்மன் மற்றும் கொங்கேஸ்வரர் சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன. நிறைவாக தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் நடத்தி, மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்மனை வழிபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story