கந்தூரி விழா - வேளாங்கண்ணி பேராலய அதிபர் நாகூர் தர்காவுக்கு வந்தார்.

கந்தூரி விழா - வேளாங்கண்ணி பேராலய அதிபர் நாகூர் தர்காவுக்கு வந்தார்.

நாகூர் தர்கா கந்தூரி விழா - வேளாங்கண்ணி பேராலய அதிபர் நாகூர் தர்காவுக்கு வந்தார

நாகூர் தர்கா கந்தூரி விழா - வேளாங்கண்ணி பேராலய அதிபர் நாகூர் தர்காவுக்கு வந்தார
கந்தூரி விழா அழைப்பிதழை ஏற்று வேளாங்கண்ணி பேராலய அதிபர் நாகூர் தர்காவுக்கு வந்தார். நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் 467-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி சந்தன கூடு ஊர்வலம் நடைபெறுகிறது. தொடர்ந்து 24-ந்தேதி அதிகாலை ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூகம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க வேளாங்கண்ணி பேரலாய அதிபர் இருதயராஜ் உள்ளிட்டோருக்கு தர்கா நிர்வாகம் சார்ப்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அழைப்பிதழின்பேரில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்கு தந்தைகள் நாகூர் தர்காவுக்கு வந்தனர். அவர்களை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் காஜி ஹூசைன் சாஹிப், போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் தர்கா ஆலோசனை குழு தலைவர் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் ஆகியோர் வரவேற்றனர். அதையடுத்து பங்கு தந்தைகள் தர்கா அலுவலகத்தில் சிறிது நேரம் அமர்ந்து நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தனர். நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், நாகூர் சமூக அலுவலர் சித்தீக், தர்கா மேலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கிறிஸ்தவ பங்கு தந்தைகள் தர்காவிற்கு வந்தது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக நிகழ்வதாக தர்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்

Tags

Next Story