தென்பெண்ணை ஆற்றில் கங்கா ஆரத்தி விழா

தென்பெண்ணை ஆற்றில் கங்கா ஆரத்தி விழா
நெல்லிக்குப்பம் விஸ்வநாதபுரத்தில் எழுந்தருளியுள்ள விஸ்வநாதபுரீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்து கும்ப கலசம் கொண்டு சிவ வாத்திய முழங்க வீதி வழியாக சென்று தென்பெண்ணை ஆற்றில் கங்கா ஆரத்தி செய்யப்பட்டது. இயற்கை சீற்றம் தற்பொழுது தமிழகத்தின் தலைநகரம் தென் மாவட்ட பகுதிகளை ஆட்டி படைத்து கொண்டுள்ள இத்தருணத்தில் நமது கடலூர் மாவட்டத்தில் பெரும்‌‌ சீற்றும் ஏற்படாத சுபிச்சமான மழை பொழிய சரியான வேண்டுதலுக்கு ஏற்ற இடமாக கருதி தென்பெண்ணை ஆற்றில் ஆரத்தி விழா செய்யப்பட்டது பொதிகை மலையில் தவத்தில் அமர்ந்திருக்கும் நந்தி தேவர் வெப்பம் தாலாது அன்னை பொன்னியம்மன் இடம் வேண்டுதல் வைக்க அன்னை அய்யன் சிவபெருமானிடம் கூறி நந்தி தேவரின் வெப்பத்தை போக்கும் மாரு கேட்டுக் கொள்ள அதன் பொருட்டு அய்யனின் ஜடாமுடியில் அமர்ந்திருக்கும் கங்கை பெருக்கெடுத்து சிவனுடைய பினாகினி என்னும் அம்பின் வழியாக நந்தி தேவர் தலையில் தீர்த்தம் விழா தீர்த்தமே நதியாக வெளிப்பட்டு பல மாவட்டங்களை கடந்து வழியில் பல தீர்த்தங்களை உள்ளடக்கி ராம லக்ஷ்மண தீர்த்தம் காசிப முனிவர் தீர்த்தம் கண்ணனார் தீர்த்தம் கபிலர் தீர்த்தம் சூரிய தீர்த்தம் எமன் தீர்த்தம் என பல தீர்த்தங்களை உள்ளடக்கிய தென்பெண்ணை ஆறு வங்கக்கடலில் கலக்கின்றபடியால் இந்நதியில் நமது வேண்டுதலை பஞ்சபூதங்களின் சீற்றம் தாக்காத வண்ணம் மார்கழி பௌர்ணமி நாளில் சிறப்பாக ஆரத்தி எடுக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story