சங்கரநயினார் கோயிலின் வரலாறும், வழிபாட்டு முறையும்

சங்கரநயினார் கோயிலின் வரலாறும், வழிபாட்டு முறையும்

சங்கரநயினார் கோயில்

சங்கரநயினார் கோயிலின் இறைவன் சங்கரலிங்க சுவாமி இறைவன் கோமதி அம்மாள் என்ற ஆவுடையம்மன். உக்கிர பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட கோயிலின் தொன்மை கிபி 1022. இக்கோவிலில் ஆடித்தபசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் சங்கரன்கோவிலில் இந்த கோயில் உள்ளது. ஹரி பெரியவரா? அரண் பெரியவரா? என்ற சர்ச்சை எழுந்த போது உமாதேவி குழப்பமுற்றாள். ஒரு பக்கம் அண்ணன் இன்னொரு பக்கம் கணவன் யார் பெரியவர் என்று அறியும் பொருட்டு சிவபெருமானை நோக்கி ஒற்றைக்காலில் தவம் இருந்தாள். இறைவனும் அம்பாளின் சந்தேகம் நீங்க அரியும் நானே அரணும் நானே என்று காட்சி தந்தார். ஆடித்தபசுத் திருநாளில் இறைவன் மாலையில் சங்கரநாராயணனாகவும், இரவில் சங்கர லிங்கமாகவும் காட்சி தருகிறார். கோமதி அம்மன் தலத்தில் தரப்படும் புற்று மன்னை நாள்தோறும் பூசி அணிபவருக்கு குண்ம நோய் , வயிற்றுவலி முதலியனவும் தீராத பிறவி பிணிநோய்களும் தீருகின்றன என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் உத்திராட நாளில் சங்கர நாராயணர் கோமதி அம்மனுக்கும் சங்கரன்,பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு வழங்கப்படும் நெய்வேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர் தங்கம், பித்தளை, வெண்கல ச்சாமான்கள், துணி, ஆடு ,கோழி, உப்பு ,மிளகாய், மிளகு காய்கறிகள் பல வகை தானியங்கள் மற்றும் பாம்பு,தேள், ஆகியவற்றின் உருவங்கள் பொறித்த வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகவும் செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story