அத்திவரதர் (காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில்) தல வரலாறு
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில்
திருவரங்கம் திருப்பதிக்கு எல்லாம் முந்தைய புராண சிறப்பு கொண்டது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் தல வரலாறு ஆதியில் சிருஷ்டியை மேற்கொண்ட பிரம்மதேவர் தனது காரியம் செவ்வனே நடைபெற காஞ்சியில் ஒரு யாகம் செய்தார் தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மதேவரிடம் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி யாகத்துக்கு வரவில்லை சரஸ்வதி தேவி இல்லாமல் பிரம்மதேவரால் யாகத்தை பூர்த்தி செய்ய முடியாது எனவே பிரம்ம தேவர் சரஸ்வதி தேவிக்கு பதிலாக காயத்ரி சாவித்திரி ஆகியோரின் துணையுடன் யாகத்தை தொடங்கினார் .சினம் கொண்ட சரஸ்வதி தேவி பிரம்மதேவரின் யாகசாலையை அளிக்க வேகவதி ஆறாக மாறி வெள்ளப்பெருக்கெடுத்து வந்தாள். பிரம்மதேவரின் யாகத்தை காக்க திருவுள்ளம் கொண்ட திருமால் நதிக்கு நடுவில் சயன கோலம் கொண்டார் . வெட்கிய சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றி கொண்டாள்.பிரம்மதேவரின் யாகமும் நிறைவு பெற்றது தனக்காக வந்து யாகத்தை காத்த பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்ம தேவர் பெருமாளை பணிந்து தொழுதார் தேவர்களும் பெருமாளை வணங்கி வரங்களை கேட்டனர் அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் கொடுத்ததால் பெருமாள் "வரதர்"என்று பெயர் கொண்டார். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் புண்ணியகோடி விமானத்தில் சங்கு சக்கரம் கதை தாங்கிய திருக்கோளத்தில் காட்சி தந்தார் எனவே அதே நாளில் பிரம்மதேவர் தனக்கு தரிசனம் தந்த பெருமாளின் திருவடிவத்தை அத்தி மரத்தில் வடித்து வழிபட்டார் இப்படி தான் அத்திவரதர் மண்ணுலகில் எழுந்து அருளினார் .ஒருமுறை பிரம்மதேவர் அத்திவரதரை முன்னிறுத்தி ஒரு யாகம் செய்தார் யாகத்தீயின் காரணமாக அத்தி வரதர் பின்னப்பட்டு விட்டார். பிரம்மதேவர் பதறிப் போனார் வேறு எந்த வடிவத்திலும் பெருமாளை உருவாக்க முடியாத சூழலில் பிரம்மா திருமாலை வேண்டினார் அவருடைய ஆலோசனையின் படி அத்திவரதரை கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்துக்கு வடக்கில் உள்ள இரண்டு திருக்குளங்களில் தென் திசையில் உள்ள நீராளி மண்டபத்துக்கு கீழே உள்ள மற்றொரு மண்டபத்தில் வெள்ளிப் பேளையில் சயனக்கோலத்தில் வைத்தார்.யாகத் தீயில் உஷ்ணமான பெருமாள் கலியுகம் முழுக்க இந்த அமிர்தரஸ் எனும் ஆனந்தபுஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் இருப்பார் என்றும் இதனால் எந்த காலத்திலும் இந்த திருக்குளம் வற்றாது என்றும் பிரம்மதேவருக்கு சொல்லப்பட்டது அத்திவரதர் திருக்குளத்துக்கு அடியே சென்றதும் பழைய சீவரம் என்ற ஊரில் இருந்த தேவராஜ பெருமாள் அத்திகிரிக்கு அருளவந்தார்.ஆதியில் தோன்றிய அத்தி வரதர் நீருக்கடியே அறிதுயிலில் இருக்கிறார். பிரம்மதேவருக்கு பெருமாள் கட்டளையிட்டபடி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை எல்லாம் இறைத்துவிட்டு பெருமாள் மேலே எழுந்தருள்வார் சயனம் மற்றும் நின்ற கோலமாக 48 நாட்கள் பக்தர்களுக்கு வரதர் சேவை சாதிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவரை தரிசிக்க முடியும் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.