தபால் முறைய எப்டி கண்டுபிடிச்சாங்க!

தபால் முறைய எப்டி கண்டுபிடிச்சாங்க!

தபால் முறை

பண்டைக்காலத்தில் தூதுவர்கள் மற்றும் புறாக்கள் மூலம் மற்றவர்களுக்கு செய்திகளை அனுப்பினார்கள். அதற்கும் முன்னால் மலைகளின்மீது ஏறி நின்று கைகளையோ துணி களையோ அசைத்தோ, வேறு சைகைகள் மூலமோ செய்திகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.

குதிரைகள் மூலம் பயணம் செய்து செய்திகளைத் தூதுவர்கள் கொண்டு சென்றார்கள். இது கி.பி. 1200-ஆம் ஆண்டுகளில் சீனாவில் வழக்கத்திலிருந்தது. இதற்காகப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் சீனாவில் இருந்தன. பிறகு 1400-ஆம் ஆண்டில் நான்காம் எட்வர்டு மன்னர் என்பவர். முதலில் இங்கிலாந்தில் தபால் நிலையங்களை உருவாக்கினார். அந்தத் தபால் நிலையங்கள் மூலம் அரசுச் செய்திகள் மட்டுமே பிற இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அதற்குப் பிறகு கி.பி. 1516-இல்தான் பொது மக்களுக்காகத் தபால் நிலையங்களை இம்மன்னர் உண்டாக்கினார். பொதுமக்களின் செய்திகளும் இந்நிலையங்களின் மூலம் மற்றவர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. முதல் தபால் போக்குவரத்து வியன்னாவுக்கும் பெர்லினுக்கும் இடையே தொடங்கியது. முதலில் தபால் தலைக்குப் பதிலாக ஒரு பென்னி கட்டணம் செலுத்தப்பட்டது. இதை இரண்டாம் சார்லஸ் மன்னர் என்பவர் கொண்டு வந்தார். இப்படிக் கட்டணம் கட்டிய தபால் முறையில் ஊழல்கள் ஏற்பட்டன. இந்த ஊழலைத் தடுக்க தபாலின் எடைக்கு ஏற்ப தபால் தலை ஒட்டி அனுப்பும் முறை 1440-ஆம் ஆண்டு 'ரோலண்டு ஹில்' என்னும் பள்ளியாசிரியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்கள் போய்ச் சேரும் தூரத்தைக் கணக்கிடாமல், தபாலின் எடையை மட்டும் கணக்கிட்டு அதற்கேற்ப தபால்தலை ஒட்டி அனுப்பும் முறை இப்படித்தான் தோன்றியது. அந்த பால் தலைகளில் மன்னர்களின் தலை உருவம் மட்டும் பொறிக்கப்பட்டதால் அவற்றுக்கு அப்பெயர் ஏற்பட்டது.

உலகின் முதல் தபால் தலை, 1840-ஆம் ஆண்டு, மாதம் வெளியிடப்பட்டது. 'பென்னி பிளாக்' என்னும் விக்டோரியா மகாராணியின் படம் கொண்ட தபால் தலை இங்கிலாந்தில் முதன்முதலாக வெளியிடப்பட்டது. அந்தத் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் இல்லை. அதற்குப் பின்பு மற்ற நாடுகளும் தபால் தலைகளை வெளியிட்டன. அவற்றில் அவை தங்கள் நாட்டின் பெயரையும் பொறித்துக்கொண்டன. ஆனால், முதல் தபால் தலையை வெளியிட்ட பெருமை கொண்ட இங்கிலாந்து இன்றும் அது வெளியிடும் தபால் தலைகளில் அந்த நாட்டின் பெயர் இல்லாமல்தான் வெளியிடுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story