ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்பிரமணியரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் !!!

ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்பிரமணியரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் !!!

ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர்

ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்பிரமணியரை மனமுருக வழிபட்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதற்கென தனி வழிபாட்டு முறை உள்ளது. ஒவ்வொரு மாதமும் பரணி கிருத்திகை நட்சத்திரம் அன்று இரவு குழந்தை பாக்கியம் பெற விரும்பும் பெண்கள் ஆண்டார்குப்பம் தளத்தில் தங்கி வழிபாடு செய்ய வேண்டும்.

மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்து முருகனுக்கு நடக்கும் பாலபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும். மூன்று கிருத்திகை நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து வந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கோவிலில் தலவிருட்சம் அருகே மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டுவார்கள். நூற்றுக்கணக்கான தொட்டில்கள் காணப்படுகிறது. ஏராளமானோர் இதன் மூலம் பலன் பெற்றுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story