பூனை வந்தால் ஐசுவரியமா?

பூனை வந்தால் ஐசுவரியமா?

பூனை

வீட்டு மிருகங்களை வாழ்க்கையின் பாகமாகவே கருதியிருந்தனர் நம் முன்னோர்கள். நாய், பூனை,பசு,பறவை, எல்லாமே அவர்களுக்கு கூட்டுக் குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருந்தன. உணவும் வளர்க்கும் விலங்கினங்களுடன் பகிர்ந்தே உண்டிருந்தனர்.

அன்பும் பாசமும் இவ்விலங்குகளை குடும்பத்துடன் இணைத்திருந்தது. இதனால் அவைகளும் மனிதனிடம் நன்றியுடனும் விசுவாசமாகவும் இருந்தன. மனிதன் மிக ஈடுபாடுடன் இவைகளைப் பராமரித்து வந்தால் அவ்விலங்குகளும் மனிதனின் உடமைகளையும் மனிதனையும் பாதுகாத்தும் ரட்சித்தும் நிலை நிறுத்த ஜாக்கிரதையுடன் செயல்பட்டு வந்தன.

நம்பிக்கைகளும் ஆசாரங்களும் 195 எல்லா வீட்டு மிருகங்களைப் போலவே பூனைகளும் என்றும் மனிதனுடன் அன்பாகப் பழகி வந்திருந்தது. பூனையில்லாத வீட்டில் எங்கிருந்தாவது பூனை வந்தால் அது வீட்டிலுள்ள தீய பிராணிகளைக் கொன்று நிர்மூலமாக்குதல் வழக்கம்.

மனிதனுக்கு தொந்தரவாகவும் தீங்கிழைப்பதுமாக இருக்கும் தீயப்பிராணிகளைக் கொன்று, அவைகளை பயமுறுத்துமாறு எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டே வீட்டைச் சுற்ற வருவதும் அதன் வாழ்க்கை முறை. இவ்வாறு மனிதனுக்கு மிகவும் பயனளிக்குமாறு வந்து சேருவதனால் பூனை வந்தால் ஐசுவரியம் என்று முன்னோர்கள் கூறி வந்தனர்.

Tags

Next Story