உலகிலேயே மிக உயரமான காளீஸ்வரி கோயில்

உலகிலேயே மிக உயரமான காளீஸ்வரி கோயில்

காளீஸ்வரி 

உலகிலேயே மிக உயரமான காளீஸ்வரி கோயில்
உலகிலேயே மிக உயரமான காளீஸ்வரி கோயில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தப்பார் கிராமத்தில் காலேஸ்வரர் காளிஸ்வரி கோயில் அமைந்துள்ளது. 2000ம் ஆண்டு கதிர் பெரியசாமி என்பவர் விவசாயம் செய்த இடத்தில் சிவன் நாக ரூபத்தில் காட்சி கொடுத்ததாகவும் அவரின் அருளால் இந்த கோவிலை கட்டியதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஜீவசமாதி அடைந்ததாகவும் கோவில் பூசாரி தெரிவித்தார். உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்திலும்,ஸ்ரீ காளீஸ்வரி 54 ¼ அடி விஸ்வரூப தரிசனம் தருகிறார்கள். விஸ்வரூப மஹாகாளீஸ்வரியின் திருப்பாதத்தின் கீழ் உள்ள பதினாறு படிகளும் பதினாறு செல்வங்களாக அமைந்துள்ளது இங்கு பாதாளத்தில் இயற்கையான நீர் ஊற்றில் (பாதாள கங்கையில்) ஜலகண்டேஸ்வரராக உள்ளார்.பத்து அடி பாதாளத்தில் சகஸ்ர லிங்க ஜலகண்டேஸ்வரர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடும் கோடை காலத்தில் கூட இரண்டு அடிக்கு நீர் நிரம்பி இருக்கும். மகாசிவராத்திரி அன்று மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பூஜைகள் செய்யப்படுகிறது இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக வில்வம் மரம் திகழ்கிறது இந்த ஆலயத்தில் நாக தோஷம், சர்வகால தோஷம், ராகு,கேது தோஷம், பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது

Tags

Next Story