கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா இன்று துவக்கம்

நாமக்கல் கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று இரவு கிராம சாந்தியுடன் துவங்குகிறது
கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி 21 நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீரம்பூரில் பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. கொங்கு வேளாளர் கவுண்டர்களில் செம்பூத்தான் குலம், பண்ணை குல குடிப்பாட்டு மக்களின் குலதெய்வமாக எட்டுக்கை அம்மன் வணங்கப்படுகிறது. கடந்த, 2009ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 12 ஆண்டுக்கு பின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வருகிற பிப்ரவரி 21ல் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கீரம்பூரில் பிரசித்தி பெற்ற எட்டுக்கை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது ராஜகோபுரம், மூலஸ்தானம், கோபுரம், பரிவார தெய்வ கோபுரங்கள் மற்றும் அம்மனுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று பிப்ரவரி 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு கிராம சாந்தியுடன் விழா தொடங்குகிறது. 17-ஆம் தேதி சனிக்கிழமை அனுமதி பெறுதல், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகளும், 18-ஆம் தேதி காலை 9 மணிக்கு பசு, குதிரை, யானை செண்டை, நையாண்டி மேள பரிவாரங்களுடன் வேலூா் காவிரி ஆற்றில் இருந்து புனித தீா்த்தக் குடங்களுடன் முளைப்பாரி ஊா்வலம் தொடங்கி கோயிலைச் சென்றடைகின்றது. இதைத் தொடா்ந்து அன்று மாலை 6 மணிக்கு முதற் கால யாக பூஜையம், 19-ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும் மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற உள்ளது. 20-ஆம் தேதி நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. தொடா்ந்து மாலை கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பு நிகழ்ச்சியும் இரவு திருமுறை பாராயணம், வேத பாராயணம், மூல மந்திரங்களுடன் ஐந்தாம் கால யாக பூஜையும், எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடைபெறுகிறது. 21-ஆம் தேதி அதிகாலை ஆறாம் கால யாக பூஜை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறும். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கீரம்பூா் எட்டுக்கை அம்மன் கோயில் திருப்பணிக் குழுவினா், அறங்காவலா் குழுவினா், செம்பூத்தான் குல, பண்ணை குல பங்காளிகள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story