ஸ்ரீ குள்ளாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா.

முத்தக்காப்பட்டி ஸ்ரீ குள்ளாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முத்தக்காப்பட்டி ஸ்ரீ குள்ளாயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, வெள்ளியணை அருகே உள்ள முத்தக்காப்பட்டியில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ குள்ளாயிஅம்மன், ஸ்ரீ மாணிக்கமலையான், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடைபெற்றது. பின்னர், புனித நீரை கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனை தொடர்ந்து மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, தாந்தோணி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ரகுநாதன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story