லத்துவாடி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

லத்துவாடி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

 ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக பெருவிழா

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் லத்துவாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக பெருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி சிறப்பு யாக வேள்விகள் அமைக்கப்பட்ட பூர்ணாஹீதி முடிந்த பின் கலச புறப்பாட்டுடன் சிவாச்சாரியார்கள் திருக்கோவிலை சுற்றி வந்து திருக்கோவில் மேல் உள்ள விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக பெருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது, பின் மூலவர் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் வணங்கிச் சென்றனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story