மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

1560 இல் விஸ்வநாத நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட இக்கோயிலை கட்ட சுமார் 120 ஆண்டுகள் ஆயிற்று. புராண கதைகள் கூறியபடி விமானத்தை எட்டு யானைகளும், 32 சிங்கங்களும், 64 கணங்களும் தாங்குவது போன்று அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும் .மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் வாயிற்கதவுகளிலும் தெற்கு கோபுரத்திற்கு கீழே உள்ள கற்றூன்களிலும் கண்கவர் நடன கலை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் பல பகுதிகளில் கல்வெட்டுகள் பழங்காலத்து நாணயங்கள் சங்க காலத்து புலவர்களின் திருவுருவங்கள் ஆகியன உள்ளன. பல வகை உயிரினங்களை வாகனங்களாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளதை. காணலாம். மீனாட்சி அம்மன் கோயிலின் உட்பகுதியில் உள்ள அட்டசக்தி மண்டபத்தில் சிற்ப வேலைபாடு அமைந்த தூண்களில் மதுரை இளவரசி மீனாட்சியின் கதை சிவனின் அவதாரமாகிய சுந்தரேஸ்வரர் உடைய திருமணம் போன்றவை மிகச் சிறப்பாக அமைந்துள்ளன கோவிலுக்குள் உள்ள பொற்றாமரை குளத்தில் தங்க தாமரை உள்ளது. இந்த பொற்றாமரை குளம் இருக்கும் இடத்தில் தான் பழைய தமிழ் இலக்கிய கழகமான சங்கத்தின் இலக்கிய சந்திப்பும், பரிசளிப்பும் நடந்தேறியது என்று கூறப்படுகிறது சிவபெருமானால் ஆதியில் படைக்கப்பட்ட "ஆதி தீர்த்தம்" எனப்படும் இந்த பொற்றாமரை குளத்தை சுற்றியுள்ள சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் பொறிக்கப்பட்டுள்ளன .தெற்கு சுவரில் குறட்பாக்கள் சலவை கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட வசந்த மண்டபத்தில் மீனாட்சி திருமண நிகழ்ச்சிகள் ராவணன் கைலாய மலையை தூக்கியது சூரிய சந்திரர் யானைக்கு கரும்பு வழங்கியது முதலிய சிற்பங்களையும் காணலாம். 1646 இல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட மாரியம்மன் தெப்பக்குளம் மீனாட்சி அம்மன் கோயிலின் பரப்பளவை கொண்டது. இந்த தெப்பக்குளம் மீனாட்சி கோவிலுக்கு கிழக்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை நகரின் அமைப்பு மீனாட்சியம்மன் கோவிலை நடு நாயகமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது கோவிலை சுற்றி நான்கு திசைகளிலும் ஆடி வீதி சித்திரை வீதி ஆவணி மூல வீதி மாசி வீதி வெளிவீதிஎன சதுர வடிவில் இடம் பெற்று இருக்கின்றன. மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மொத்த பரப்பு 17 ஏக்கர் ஆகும் இதில் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்கும் அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்வதற்கும் மற்றும் முக்குருணிப் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வதற்கும் என மூன்று மடப்பள்ளிகள் அமைந்துள்ளன இவற்றின் மொத்த பரப்பளவு சுமார் 7820 சதுர அடி ஆகும் அதாவது 20 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நாள்தோறும் 500 நபர்களுக்கும் இதன் உப கோயில்களில் நாள் ஒன்றுக்கு 300 நபர்களுக்கும் ஆக மொத்தம் 800 நபர்களுக்கு அன்னதானச் திட்டத்தின் கீழ் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது

அழகர் கோவில்

அழகர்கோயில் மதுரையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அழகர் மலை அடிவாரத்தில் உள்ளது மீனாட்சியின் சகோதரரான கள்ளழகர் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நடக்கும் திருமணத்திற்கு செல்வதை தவித்தார் நேரங்கழித்து திருமண விழாவிற்கு சென்றார். இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது கொண்டாடுகிறார்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தங்கத்திலான அழகர் திருவுருவத்தை சுமந்து கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் செல்கிறார்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சி முடிந்த கட்டத்தில் ஊர்வலம் வைகை கரையை அடையும் அழகர் மலைத்தொடரின் இயற்கை சிறப்பினை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் விரிவாக குறிப்பிட்டுள்ளார் இம்மலைத் தொடரில் உயர்ந்த பகுதியில் சமணத் துறவியார் வாழ்ந்த இடம் பஞ்சபாண்டவர் படுக்கை என்று வழங்கப்படுகிறது .இம்மலை மீது பல சுனைகள் உள்ளன . இவை தவிர சரவணப் பொய்கை என்னும் தெப்பக்குளமும் சக்கர தீர்த்தமும் உள்ளன சிலப்பதிகாரம் , பரிபாடல்,திருப்புகழ் அழகர் அந்தாதி ஆகியவையும் இத்தல புகழை பாடியுள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story