திருநறையூர் ராமநாதசுவாமி கோயிலில் மகா அபிஷேக வழிபாடு

திருநறையூர் ராமநாதசுவாமி கோயிலில்  மகா அபிஷேக வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

திருநறையூர் ராமநாதசுவாமி கோயிலில் குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கும் சனி பகவானுக்கு மகா அபிஷேக வழிபாடு நடைபெற்றது.

கும்பகோணம் அருகே திருநறையூர் ராமநாதசுவாமி கோயிலில் குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கும் சனி பகவானுக்கு மகா அபிஷேக வழிபாடு. ஏராளமான பக்தர்கள் தரிசனம். கும்பகோணம் அருகே உள்ள திருநறையூரில் ராமநாத சுவாமி கோயில் உள்ளது.

இங்கு சனி பகவான் ஜெஷ்டாதேவி, மந்தாதேவி என இரு தேவியருடன், மாந்தி, குளிகன் என இரு புதல்வருடன் குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கிறார். கொடிமரம், பலி பீடம், காக்கை வாகனம் என சனி பகவானுக்கு இங்கு மட்டுமே அமைந்துள்ளது தனி சிறப்பு. சனிதோஷ பரிகார தலமாக இத்தலம் உள்ளது. இத்கோயிலில் உள்ள சனீஸ்வரர் பகவானுக்கு வேறு எந்த தலத்திலும் நடைபெறாத திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது மேலும் சிறப்பாகும். குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கும் சனி பகவானுக்கு தினமும் குளிகை நேரத்தில் மகா அபிஷேக வழிபாடு நடைபெறுவது சிறப்பு. இங்கு சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் சனி பகவானுக்கு விசேஷ ஆராதனைகளுடன் வழிபாடு நடைபெறுகிறது. இந்நிலையில் குடும்ப சகிதமாய் அருள்பாலிக்கும் சனி பகவானுக்கு காலை முதல் சிறப்பு ஆராதனைகளுடன் மகா அபிஷேக வழிபாடு நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளை ஆலய அர்ச்சகர் ஞானசேகர் சிவாச்சாரியார் தலைமையில் ஏராளமான சிவாச்சாரியார்கள் செய்தனர். இந்த சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் பிரபாகரன், தக்கார் ஜெயலட்சுமி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story