சோழன் மாளிகையில 18 ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேகம்

சோழன் மாளிகையில 18 ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேகம்

புனித நீர் ஊற்றல்

சோழன் மாளிகையில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ ஷண்முகர், சுவாமி ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே சோழன் மாளிகை தெற்கு தெருவில் எழந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ ஷண்முகர் சுவாமி ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து,

கடந்த 23ம் தேதி சனிக்கிழமை முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் தொடங்கியது, இன்று 2ம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மகா பூர்ணாஹதியுடன் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் அதனையடுத்து,

விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமவாசிகள் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உள்ளிட்டோர் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story