வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி

வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் தலையாய விரதமே மகா சிவராத்திரி விரதம் ஆகும் வருடத்தில் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களம் கிடைக்கும் . ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுகின்ற மகா சிவராத்திரி நோன்பாகும். யுகம் யுகமாய் நடைபெற்று வரும் சிவராத்திரி வழிபாடானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவு பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தால் நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதியின் படி அர்ச்சனை செய்தார் பூஜையில் முடிவில் அதாவது சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை சிவ பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தை அளிக்க வேண்டும் என்று அருள்புரியுங்கள் என அம்பிகை வேண்டி கொண்டாள். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார் அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது சிவராத்திரி என்பதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண்விழித்தலும் லிங்கங்களுக்கு செய்யப்படும் பல வகையான அபிஷேகங்களுக்கும் நான்கு கால பூஜைகளும் தான். யுகம் யுகமாய் நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் திருமணமாகாத பெண்கள் சிவராத்திரியில் விரதம் இருந்து பூஜை செய்தால் மிகச் சிறந்த கணவன் கிடைக்க பெறுவார்கள் வருடத்திற்கு ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும் பணி சிறக்கும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சங்கள் கிடைக்கும் என்கிறது சிவபுராணம்.

Tags

Read MoreRead Less
Next Story