சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் முத்துப் பல்லக்கு வீதியுலா

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் முத்துப் பல்லக்கு வீதியுலா

கோப்பு படம் 

கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி முத்துப் பல்லக்கு வீதியுலா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

கும்பகோணம் வட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி முத்துப் பல்லக்கு வீதியுலா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, கடந்த 24-ம் தேதி தீர்த்தவாரி, 27-ம் தேதி வள்ளி தேவசேனா உடனாய சண்முகம், வேடமூர்த்தி, வள்ளி நாயகி, நாரதர், நம்பிராஜன், நந்தமோகினி சகிதமாக உற்சவ மண்டபம் எழுந்தருளல், இரவு தினைப்புனைக் காட்சி, 28-ம் தேதி அரசலாற்றில் யானை விரட்டுதல்,

நம்பிராஜன் சீர் கொண்டு வருதல், திருக்கல்யாணம் ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முத்துப் பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முத்துப் பல்லக்கில் வள்ளி, தேவசேனா உடனாய சண்முக சுவாமி சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மேலும், 108 சங்காபிஷேகம், சுவாமி யதாஸ்தானம் அடைதல் நேற்று நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை துணை ஆணையர் உமா தேவி, கண்காணிப்பாளர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story