மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் !

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் !

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் 

மயிலாப்பூர் என்றால் மயில்கள் நிறைந்த இடம். மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் என்று பொருள். மயிலாப்பூர் என்ற பெயரை மயிலை என்று மருவியது .இங்குள்ள ஏழு சிவாலயங்களையும் ஒரே நாளில் முறையாக தரிசித்தால் எல்லா பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் "கையிலையே மயிலை. மயிலையே கயிலை" என்று போற்றப்படுகிறது. தற்போதுள்ள கபாலீஸ்வரர் கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் வள்ளல் நயனியப்ப முதலியாரின் மகன் முத்தியப்ப முதலியாரால் கட்டப்பட்டது. அதன் அருகே உள்ள "கபாலி தீர்த்தம் "என்ற தெப்பக்குளத்தையும்அவரை வெட்டினார். இந்த தெப்பக்குளத்தின் நடுவில் நீராழி மண்டபமும், கரைகளில் பல்வேறு மண்டபங்களும் இடம்பெற்றுள்ளன. தைப்பூசத் தண்று இங்கு தெப்பத் திருவிழா நடைபெறும். கருவறையில் மேற்கு நோக்கி லிங்க திருமேனியாக கபாலீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இந்த சன்னதிக்கு இடதுபுறம் தெற்கு நோக்கியவாறு கற்பகாம்பாள் சன்னதி உள்ளது. கற்பக மரம் போல பக்தர்களுக்கு வேண்டிய வரம் தருவதால் அன்னைக்கு கற்பகாம்பாள் என்ற பெயர் நிலைத்துள்ளது. நின்ற கோலத்தில் அழகே உருவாக அன்னை காட்சி அளிக்கிறார். அம்பாள் சன்னதி அருகே உள்ள 12 கால் மண்டபத்தில் நவராத்திரி விழாவின் போது கற்பகாம்பாள் கொலுவிருப்பாள் .இக்கோவில் ஐந்து கால பூஜை நடைபெறுகிறது. இக்கோயிலின் தலை விருட்சம் புன்னை மரம் .

இங்குள்ள அறுபத்து மூவருக்கு ஐம்பொன்னால் ஆன சிலைகள் உள்ளன. இங்கு நடைபெறும் அறுபத்து மூவர் விழா சிறப்பானது. இங்கு நடைபெறும் அறுபத்து மூவர் விழாவில் சூலம் ஏந்தியபடி சிவபெருமான் பவனி வர, மற்றும் கற்பகாம்பாள் வள்ளி தெய்வானை சமேத சிங்காரவேலர் ஆகியோரும் உடன் வருகின்றனர். இவர்களை தொடர்ந்து பல்லக்குகளில் ஒருவர் பின் ஒருவராக விநாயகர், சண்டிகேஸ்வரர் ,மற்றும் பல்லக்கு ஒன்றுக்கு நாலு நாயன்மார்கள் வீதம் 63 நாயன்மார்கள் பவனி வருவது மிகவும் கண்கொள்ளா காட்சியாகும். மயிலை திருவள்ளுவர் கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும் திருவள்ளுவர் சிலையும் இதில் கலந்து கொள்ளும். நவராத்திரி விழாவின் போது ஒன்பது நாட்களும் ஒவ்வொரு கோலத்தில் அம்பாள் கொழுவிருப்பாள். தேரோட்டம் ,அதிகார நந்தி சேவை ஆகிய விழாக்களும் முக்கியமானவை.சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது ,அப்பொழுது தோகை விரித்தாடிய ஒரு மயில் பார்வதியின் கவனத்தை ஈர்த்தது பார்வதி தேவியின் கவனம் சிதறியதை கண்ட சிவபெருமான் "மயில் உரு கொண்டு மண்ணுலகம் செல்வாயாக" என்று சபித்துவிட்டார். அதன்படி பார்வதி தேவி மயில் உருவம் கொண்டு பூலோகம் வந்து, புன்னைவனம் நிறைந்த சோலை ஒன்றில் லிங்கம் வைத்து வழிபாட்டாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் பார்வதி தேவிக்கு அருள் புரிந்து ஆட்கொண்டார். அத்துடன் "நீ மயிலாக வலம் வந்த இடம் மயிலை" என்று பெயர் பெறும். நீ இங்கு கற்பகவள்ளியாக அருள்பாலிப்பாயாக "என்று அருளினார். அதன்படி அன்னை இங்கு கற்பகவள்ளியாக -கற்பகாம்பாளாக விளங்குகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story