வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளிய நம் பெருமாள்

ஸ்ரீரங்கம் தெப்போர்சவத்தின் ஆறாம் நாளான நேற்று வெள்ளியணை வாகனத்தில் எம் பெருமாள் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் திருப்பள்ளி ஓடம் எனும் தெப்பத் திருவிழா கடந்த 12 -ஆம் தேதி தொடங்கியது. வரும் 20-ஆம் தேதி வரை 9 நாள்களுக்கு இந்த விழா நடைபெறுகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கின்றாா். விழாவின் 5-ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை மாலை இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவின் ஆறாம் நாளான நேற்று இரவு உற்சவர் எம்பெருமாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.விழாவின் 8-ஆம் திருநாளான வரும் 19-ஆம் தேதி முக்கிய நிகழ்வான தெப்பஉற்ஸவ விழா நடைபெறவுள்ளது. 9-ஆம் திருநாளான 20-ஆம் தேதி பந்தக்காட்சியுடன் விழா நிறைவடைகிறது.

Tags

Read MoreRead Less
Next Story