தங்கக் கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
மார்கழி மாத தேய்பிறை பிரதோஷதத்தை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினசரி அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று மார்கழி மாத தேய்பிறை பிரதோஷதத்தை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு உச்சிகால பூஜைக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று (ஜனவரி -9) மாலை 7 மணியளவில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் உள்ளது என்று திருக்கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story