நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் கிரீடம் அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் கிரீடம் அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் கிரீடம் அலங்காரம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் கிரீடம் அலங்காரம்

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில், கைகூப்பி வணங்கிய கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள்பாலித்து வருகிறார். தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு சிறப்பு நாட்களில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துபடி செய்யப்பட்டு, தொடர்ந்து தங்கக்கவசம், வெள்ளிக்கவசம், முத்தங்கி, மலர் அங்கி உள்ளிட்ட சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தீபாராதணை நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி, நேற்று நாமக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மார்கழி சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசம் கிரீடம் சாற்றப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story