உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா

வராகி அம்மன் அவதாரத்தில் துர்க்கை அம்மன்

உத்திரமேரூரில் பழமைவாய்ந்த துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

உத்திரமேரூரில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 26ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் துவங்கி, நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அவதாரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, கோமாதா பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து, நவராத்திரி கொலு முன்பு பக்தர்கள் அமர்ந்து, அம்மன் குறித்து பக்தி பாடல்களுடன் கூடிய பஜனை நடந்தது. அப்போது, வராகி அம்மன் அவதாரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்க, ஓம் சக்தி, துர்க்கை சக்தி வராகியே போற்றி என பக்தர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, தீபாராதனை மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகள், அன்னதானம் நடந்தது.


Tags

Next Story