வருகிற ஜன. 22 ல் அயோத்தி ராம ஜென்மபூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்

வருகிற ஜன. 22 ல் அயோத்தி ராம ஜென்மபூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்

வருகிற ஜன. 22 ல் அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி கும்பாபிஷேகம் - பூஜை செய்து அழைப்பிதழ் வழங்கல்

வருகிற ஜன. 22 ல் அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி கும்பாபிஷேகம் - பூஜை செய்து அழைப்பிதழ் வழங்கல்

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரத்தில் உள்ள அயோத்தியில் வருகின்ற 2024 ஆம் வருடம் ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இது தேசமே கொண்டாடக்கூடிய விழாவாக மாறியுள்ளது. இந்த விழாவிற்காக ஜனவரி மாதம் 1 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து ஹிந்து வீடுகளுக்கும் சென்று அழைப்பிதழ் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேஷத்ர அறக்கட்டளை சார்பாக அனைத்து மாநிலங்களுக்கும் அர்ச்சதையானது கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் மாநிலங்களில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்கள், 5 நகராட்சிகளுக்கு பிரித்து கொடுக்கும் நிகழ்வானது ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருகோவில் அருகிலுள்ள முல்லை மஹாலில் 11.12.23 ல் நடைப்பெற்றது. முன்னதாக கலசங்கள் அனைத்தும் ஆஞ்நேயர், நரசிம்ம சுவாமி, நாமகிரி தாயார் சன்னதியில் வைத்து பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் விஷ்வ ஹிந்து பரிஷித் வட தமிழகத்தின் அமைப்பாளர் ஸ்ரீ ராமன், சுவாமி சின்மையானந்தா, அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தை சேர்ந்த சுவாமி ஜெகநாதானந்த சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீத்தர ஷேத்தர டிரஸ்ட்டின் நாமக்கல் பொறுப்பாளர் நா.மோகன்ராஜ் நன்றி கூறினார். நிகழ்வில் கலந்த கொண்ட முக்கிய நிர்வாககிளிடம் அட்சதை நிரம்பிய கலசமும், அழைப்பிதழும் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story