அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 2 டன் பூக்களால் அலங்காரம்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2 டன் பூக்களால் அலங்காரம்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2 டன் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலின் நுழைவு வாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என்ற எழுத்தில் மலர் மாலைகளால் அலங்காரம் செய்திருந்தனர். இதற்காக வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் ஊதா உள்ளிட்ட நிறங்களில் 2 டன் சாமந்தி, ஆஸ்டர் வகை பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இ்ந்த கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாத்தப்படுகிறது. காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி, திருச்செங்கோடு ஈ.ஆா்.ஈஸ்வரன், குமாரபாளையம் பி.தங்கமணி, பரமத்தி வேலூா் எஸ்.சேகர், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன்,

சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசகன், சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் முரளிதரன், கூடுதல் ஆணையர் சங்கர், கூடுதல் ஆணையர்கள் ஹரிப்ரியா, திருமகள், கூடுதல் ஆணையர் மா.கவிதா, தலைமையிட இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், கோ.செ.மங்கையர்கரசி, பரஞ்சோதி, துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையர் சுவாமிநாதன், ஆய்வாளர் சுந்தர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாரதா, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் எம் ஜி சரவணன் நாமக்கல் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அருள் செல்வன், சுந்தரராசு, சௌந்தரம், சந்திரம்மாள், நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவா் எஸ்.பூபதி, திமுக நகர செயலாளா்கள் ராணா ஆனந்த், சிவக்குமார், நாமக்கல் நகர மன்ற உறுப்பினர் கலைச்செல்வி அன்பரசன், டி.டி.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் இரா.இளையராஜா, கண்காணிப்பாளர் செல்வி வீ.அம்சா, அறங்காவலர் குழுத் தலைவர் கா.நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வ சீராளன், சீனிவாசன், மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story