மதுரை அருகே ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் பால்குடம் ஊர்வலம்

மதுரை அருகே ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

மதுரை சிந்தாமணி மேட்டுப்பூஞ்சையில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில்,

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கிருதுமால் நதி சென்று பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் மற்றும் 21 வகையான அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் அம்மனை தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ராஜகாளியம்மன் திருக்கோவில் விழா குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story