சுவாமிமலையில் பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம்

சுவாமிமலையில் பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம்

கிரிவலத்தில் கலந்து கொண்டவர்கள்

சுவாமிமலையில் பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது

சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. சுவாமிமலை செந்தில்நாதன் காளிதாஸ், திவ்யா செந்தில்நாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக தொலைக்காட்சி புகழ் பன்முகக்கலைஞர் ராகவ் மகேஷ், மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கிரிவலத்தில் சிவத்திரு. திருவருட்செம்மல் இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன்,

செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு செந்தில்நாதன் காளிதாஸ், கிருஷ்ணதாஸ் காளிதாஸ் குடும்பத்தினர் அமுது வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story