சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா

சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா

திருவீதியுலா

சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா.
தமிழகத்தில் முருகக் கடவுள் குடிகொண்டுள்ள அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று பங்குனி உத்திர பெருவிழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை காலை ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் வெள்ளிமயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து, காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு சுவாமி வெள்ளிரதத்தில் திருவீதி உலா யதாஸ்தானம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை 26ம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை நடைபெறும்,அதனைத் தொடர்ந்து 27ம் தேதி வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முக பெருமாள், ஸ்ரீ வேடமூர்த்தி, வள்ளிநாயகி, ஸ்ரீ நாரதர், ஸ்ரீ நம்பிராஜன், ஸ்ரீ நந்தமோகினி சகிதமாக உற்சவ மண்டபம் எழுந்தருள்,அதனைத் தொடர்ந்து வள்ளி நாயகி திருவலஞ்சுழி கோயிலில் தினை, புனை காட்சிக்காக செல்லுதல், ஸ்ரீ வேடமூர்த்தி திருவீதி வலம் வந்து திருவலஞ்சுழி திருக்கோயிலில் எழுந்தருளல் செய்து அன்றைய தினம் இரவு தினைப்புனை காட்சி திருவலஞ்சுழி திருக்கோயில் வேல வேட விருத்த வேங்கை மரக் காட்சிகள் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று 28ம் தேதி அதிகாலை அரசலாற்றில் யானை விரட்டுதல் திருக்கோயிலில் எழுந்தருளி சண்முகர் காட்சி தருதலும்.29,மற்றும்30 ம் தேதிகளில் முறையே ஊஞ்சல் உற்சவ புறப்பாடு செய்யப்பட்டு 31ம் தேதி திருக்கல்யாண உற்சவம் ஸ்ரீ வள்ளி தேவசேனா ஸ்ரீ சண்முகசுவாமி புறப்பாடு, வேடமூர்த்தி ஸ்ரீ வள்ளிநாயகியார் பல்லக்கில் திருவீதியுலாவும், ஏப்ரல் 1ம் தேதி காலை ஸ்ரீ சண்முகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் செய்விக்கப்பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனையும் இரவு ஸ்ரீ சுவாமி வீதியுலா வந்து யதாஸ்தானம் சேரும் நிகழ்வுடன் பங்குனி உத்திர பெருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. இந்தநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் உமாதேவி, இணை ஆணையர் மோகனசுந்தரம்,கண்காணிப்பாளர்கள் பழனிவேல்,தமிழரசி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story